தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை படுவேகமாக சென்று கொண்டிருக்கிறது. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என கூறப்பட்ட நிலையில், அந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என அவர் மறுத்துவிட்டார். மேலும், தன்னை வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் சிக்க வைக்க வேண்டும் என சதி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இருப்பினும், காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக இந்த பணத்தைக் கொண்டு சென்றதாக சதீஷ், பெருமாள், நவீன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவு கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இது சென்னையில் பல்வேறு நபர்களிடமிருந்து கைமாற்றி கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு தாம்பரம் காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை செய்து வீடியோ பதிவு செய்தனர். சிபிசிஐடி காவல்துறை இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய தடயத்தை சிபிசிஐடி காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வழக்கில் கைதானவர்கள் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், அவருக்கான எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருக்கும் நிலையில், இந்த தடயம் விசாரணையில் முக்கிய திருப்பத்தை கொடுத்திருக்கிறது. இதனால் நயினார் நாகேந்திரன் எந்நேரமும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ