தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது!

Last Updated : Nov 29, 2018, 12:42 PM IST
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்! title=

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது!

கடந்த இரண்டு வராங்களாக தமிழகத்தில் பரவலான மழை பொழிந்து வரும் நிலையல் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது... 

"தென் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு வளிமண்டல பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. 

எனவே அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
கடந்த 24 மணிநேரத்தை பொருத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்"

முன்னதாக, தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பொழிந்து வரும் நிலையில்  பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Trending News