ஓடும் ரயிலில் மாணவி விபரீத சாகசம்: அறிவுரை வழங்கிய எஸ்.பி

யூ டியூப்களில் சென்னை ரூட் மாணவர்கள், திருவள்ளூர் ரூட் மாணவர்கள் எனத் தேடினால் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செய்த புட்ஃபோர்டு வீடியோக்களை ஏராளமாக பார்க்க முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 11:11 AM IST
ஓடும் ரயிலில் மாணவி விபரீத சாகசம்: அறிவுரை வழங்கிய எஸ்.பி title=

சென்னை அருகே ஓடும் மின்சார ரயிலில் விபரீத சாகசத்தில் ஈடுபட்ட மாணவி மற்றும் மாணவனை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண் குமார் நேரில் அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மாணவ, மாணவியர் சில விபரீத சாகசங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பொதுவாக பஸ் மற்றும் ரயில்களில் மாணவர்கள் மட்டுமே புட்போர்டு அடிப்பது, ஓடும் ரயிலில் ஜன்னலைப் பிடித்து தொங்கியவாறு பயணிப்பது பலரும் அறிந்த நிலையில், நேற்று மாணவி ஒருவர், மாணவனுடன் சேர்ந்து ஓடும் மின்சார ரயிலில் விபரீத சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களான (School Students) இருவரும் கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் நிலையத்தில், ஓடும் மின்சார ரயிலில் ஃபுட்போர்டு அடித்துள்ளனர். வேகமாக புறப்படும் ரயிலில் ஏறும் மாணவி, ஆபத்தை சிறிதும் உணராமல் அசால்டாக ஃபுட்போர்டு அடிக்கிறார். அவரைத் தொடர்ந்து மாணவர் ஒருவரும் இதேபோன்ற விபரீத சாகசத்தை செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில்  வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியிருந்தனர்.

ALSO READ: திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை

இந்த வீடியோவைப் பார்த்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண், மாணவன் மற்றும் மாணவியை பெற்றோர்களுடன் நேரில் அழைத்து விசாரித்துள்ளார். மேலும், இதுபோன்ற விபரீத சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கிய அவர், படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் என்னவாக வர வேண்டும் என எஸ்.பி வருண் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த மாணவி, தனக்கு ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். மாணவன், டி.எஸ்.பியாக வர விரும்புவதாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட எஸ்.பி வருண்குமார், படிப்பில் கவனம் செலுத்தினால் இலக்கை அடையலாம் என கூறி அனுப்பி வைத்துள்ளார். 

யூ டியூப்களில் (YouTube) சென்னை ரூட் மாணவர்கள், திருவள்ளூர் ரூட் மாணவர்கள் எனத் தேடினால் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை செய்த புட்ஃபோர்டு வீடியோக்களை ஏராளமாக பார்க்க முடியும். அந்த வீடியோக்களில், உயிரை பணையம் வைத்து சாகச செயல்களில் ஈடுபடும் அவர்கள், அதனை பெருமையாக சமூகவலைதளங்களிலும் பதிவிடுகின்றனர். 

ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களை கண்டிக்க தவறும்போதும், மற்ற மாணவர்களும் பின்பற்றும் சூழல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில், எஸ்.பி வருண்குமார், பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து கண்டித்து அறிவுரை வழங்கியது மற்ற மாணவர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ALSO READ: குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News