தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஜூன் 1 -2ம் தேதிகளில், அதாவது அடுத்த இரண்டு நாட்களுக்கு தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போன்று, தமிழகத்தில் (Tamil Nadu) அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும், அதே சமயத்தில், மாநிலத்தில் பிற மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அதே சமயத்தில், மாநிலத்தில் பிற மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ALSO READ | தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பாஸ்: தமிழக அரசு
ஆனால், மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என அவானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பநிலை முன்னறிவிப்பில், அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை, கடலூர், திருவள்ளூர், புதுவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானைலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில், ஜூன் 1 முதல் 3 வரை,40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று மணிக்கு வீசக்கூடும். கேரள கடலோர பகுதிகள் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், ஜூன் 1 முதல் 5ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ALSO READ | திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’: Jio வழங்கும் அசத்தல் ₹98 திட்டம்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR