சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான பழனி. இவர், 10 வருடத்திற்கு முன், பாரதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி, கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் குடும்ப பாரத்தைக் குறைக்க மனைவி பாரதி, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார். இதனால் பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி, மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும், அடிக்கடி மனைவி செல்லும் இடத்தினை பின்தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக மாற்றியிருக்கிறார். இந்நிலையில் நேற்று மீண்டும் மனைவி மீது சந்தேமடைந்த பழனி, மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்றார். அப்போது மூன்றாவது மாடி கழிவறைக்கு சென்ற மனைவி பாரதியை பின் தொடர்ந்து சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டு தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த பாரதியை அருகிலிருந்த நபர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க | நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - வாக்குமூலம்
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாரதி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பழனியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ