புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்) ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான (Rural Local Elections) முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது கிடைத்த தகவலின் படி, அதாவது காலை 9 மணி நிலவரப்படி, செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 20 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதேபோல காஞ்சிபுரத்தில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 11 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தின் மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் 14 சதவீதமும், வாக்குப்பதிவாகியுள்ளது.
சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் ஒருசில இடங்களில் வாக்குப்பதி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது பட்டியலில் வேட்பாளர்களின் பெயர் இல்லாததது, தொழில்நுட்பக் கோளாறு, சிசிடிவி கேமரா வேலை செய்யாதது என வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, மறுபுறம் ராணிப்பேட்டை உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் அறையின் ஜன்னல் வழியாக முகவர்கள் வாக்காளர்களுக்கு சைகை காட்டியதாகக் கூறி திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. பின்னர் போலீஸ் தலையிட்டு அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.
ராணிப்பேட்டை உள்ளாட்சித் தேர்தலில் திமுக-அதிமுக இடையே மோதல்.
ஜன்னல் வழியாக முகவர்கள் வாக்காளர்களுக்கு சைகை காட்டியதாக குற்றச்சாட்டு.
போலீஸ் தலையிட்டு பிரச்சனையை சரிசெய்தனர்.#LocalBodyElection pic.twitter.com/WeZprDhMyb
— ZEE Hindustan Tamil (@ZHindustanTamil) October 6, 2021
தற்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
ALSO READ | தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்- இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR