11 வகுப்பு மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு

Last Updated : Jul 31, 2017, 03:43 PM IST
11 வகுப்பு மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு title=

மாணவர்களின் குழப்பத்தை நீக்கும் வகையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி:-

பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அந்த தேர்வு மையங்களில் சனிக்கிழமை தோறும் 3 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்படும் என்றார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News