தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ், பெரம்பலூர் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, கரூர் மஜரா ஓடையூரைச் சேர்ந்த சுப்பிரமணி, மதுரை கன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள், புதுக்கோட்டை ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள்.
வேலூர் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன், சிவகங்கை தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கத்தாழம்பட்டு மதுரா நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், சேலம் கன்னங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், மதுரை முனிச்சாலை கிராமத்தைச் சேர்ந்த சரவண விக்னேஷ், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மனோ மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
கொருக்குப்பேட்டை, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த செரிப் மகன் சிறுவன் ரியாசு, கடலூர் பி.என். பாளையத்தைச் சேர்ந்த துலுக்காணம் மகன் பக்கிரி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.