திமுக அலுவலகம் முன் ஆவேசமாக பேசிய காங்கிரஸ் MP ஜோதிமணி!

கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் MP ஜோதிமணி திமுக அலுவலக வாசல் முன் ஆவேசமாக பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 06:18 PM IST
  • திமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  • ஆலோசனை கூட்டத்தில் MP ஜோதிமணியிடம் வேட்பாளர் தேர்வு குறித்து கலந்து கொள்ளாமல், அவர்கள் மட்டுமே பங்கீடு குறித்து பேசிக் கொண்டதால் MP ஜோதிமணி ஆத்திரமடைந்து உள்ளார்.
திமுக அலுவலகம் முன் ஆவேசமாக பேசிய காங்கிரஸ் MP ஜோதிமணி! title=

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.  அந்த வகையில் திமுகவினர் தனது கூட்டணி கட்சிகளுடன் கரூர் நகரில் கெளரி புரத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகமாக செயல்பட்டு வரும் கலைஞர் அறிவாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் பங்குபெற கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை காலை முதல் நடைபெற்றது.

ALSO READ | விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

திமுக அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களையும் வரவழைத்து இடப்பங்கீடு குறித்து கலந்தாலோசித்து வந்தனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் கூட்டணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MP ஜோதிமணியும் அதில் கலந்து கொண்டார். 

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் MP ஜோதிமணியிடம்  வேட்பாளர் தேர்வு குறித்து கலந்து கொள்ளாமல், அவர்கள் மட்டுமே வார்டு பங்கீடு குறித்து பேசிக் கொண்டதால் MP ஜோதிமணி ஆத்திரமடைந்து உள்ளார்.  உடனே இது குறித்து ஜோதிமணி திமுகவினரிடம் தன்னிடம் ஏன் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். 

jothimani

இதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அதில் திமுகவினர்  ஜோதிமணி உள்ளபட காங்கிரஸ் கட்சியினரை வெளியேறும்படி கூறியுள்ளனர்.  இதனால் ஆத்திரத்தில் அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஜோதிமணி திமுக அலுவலகம் முன் வாசலில் நின்று பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போக சொல்வது கூட்டணி தர்மமா? என்று ஆவேசத்துடன் கூறினார்.  இதனை படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களை படம் பிடிக்க கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ | அதிமுகவோடு இருந்தால் லாபம், இல்லையென்றால் இழப்பு -கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை

மேலும் நடைபெற்ற ஆலோசனை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், கரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது.  காங்கிரஸ் கொடுத்த பட்டியல் மற்றும் நாங்கள் கொடுத்த பட்டியல் என கலந்து ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் உறுதி செய்யப்படவில்லை.  3 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்து பேசப்பட்டது.  அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள், சில முரண்பட்ட கருத்துகள் உள்ளதால் தலைமையிடம் இது குறித்து நாங்கள் தகவல் தெரிவித்து இருக்கிறோம்.  ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை, எங்கள் தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமூக உடன்படிக்கை ஏற்படும், கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன, விரைவில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை  தலைமை வெளியிடும் என்று கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News