வியாபாரிகளின் அலட்சியமே தமிழகத்தில் கொரோனா பரவியதற்கு காரணம் -EPS!

தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவியதற்கு வியாபாரிகளின் அலட்சியமே காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துளார்.

Last Updated : May 13, 2020, 07:11 PM IST
  • கொரோனாவை ஒழிக்க அரசு மட்டும் அல்ல, பொதுமக்களும் தங்களால் முடிந்த வகையில் ஒத்துழைக்க வேண்டும்.
  • பணிக்கு செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • சமூக விலகலை பின்பற்றுதல் வேண்டும், வீட்டிற்கு வெளியே சென்று வருபவர்கள் கைகள் மற்றும் கால்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
வியாபாரிகளின் அலட்சியமே தமிழகத்தில் கொரோனா பரவியதற்கு காரணம் -EPS! title=

தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவியதற்கு வியாபாரிகளின் அலட்சியமே காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது.,  இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகுறது. தமிழக மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவலை மேலும் பரவாமல் தடுக்க வீதிவீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியது. கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முதலில் வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை; பின்னர் நிலைமையை உணர்ந்து வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர ஒப்புக்கொண்டனர். சுகாதார வழிமுறைகள், தனிமனித இடைவெளியை வியாபாரிகள் பின்பற்றாமல் போனதோ தொற்றுநோய் பரவுதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கொரோனாவை தடுக்க அரசு தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் மக்கள் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தவறான செய்தியினை பரப்பி வருகின்றனர்.

கொரோனாவை ஒழிக்க அரசு மட்டும் அல்ல, பொதுமக்களும் தங்களால் முடிந்த வகையில் ஒத்துழைக்க வேண்டும். அதாவது பணிக்கு செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை பின்பற்றுதல் வேண்டும், வீட்டிற்கு வெளியே சென்று வருபவர்கள் கைகள் மற்றும் கால்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  இதேப்போன்று 10 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும். கொரோனாவை விரட்ட அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Trending News