ஐந்து லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் இன்று 18552 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்ததை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 28, 2020, 01:45 PM IST
ஐந்து லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
File photo

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று இந்தியாவில் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் இன்று மட்டும் 18552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 74,622லிருந்து 78,335ஆக அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ளதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துவிட்டது.

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 49,738ல் இருந்து 51,699ஆக உயர்ந்துவிட்டது. இன்று ஒரே நாளில் 2737 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 44094 ஆக அதிகரிப்பு என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Also Read | LoCயில் தீவிரவாதிகள் அதிகரிப்பால் இந்திய ராணுவம் குவிப்பு

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்துள்ள தரவுகளின்படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,08,340. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,94,408 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,49,035. 

உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU எனப்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.