புது டெல்லி: நாட்டில் பெட்ரோல் - டீசல் (Petrol - Diesel) விலை உயர்வு குறைவதாகத் தெரியவில்லை. இன்னும் வரவிருக்கும் நாட்களில், எண்ணெய் விலைகளின் உயர்வு மக்கள் பணத்தை சூறையாட உள்ளது. எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு இல்லை. இதற்கு நேரடி காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 7 சதவீதம் அளவிற்கு விலைகள் அதிகரித்துள்ளன.
ஈரான்-அமெரிக்க பதற்றம் எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்:
உண்மையில் ஈரான் - அமெரிக்க பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவினங்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கச்சா எண்ணெய்க்காக இந்தியா சுமார் 51,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு ஆண்டு அடிப்படையில் 1.6 பில்லியன் டாலர் (ரூ. 11,531 கோடி) அதிகரிக்கிறது. அமெரிக்க தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமான் கொல்லப்பட்ட பின்னர் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 6.78 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதம் இறக்குமதி செய்கிறது:
பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு கலத்தை (பிபிஏசி) மேற்கோள் காட்டி அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பெட்ரோலிய எண்ணெய் வாங்கும் உலகின் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தியா தனது கச்சா எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகாவும், 40 சதவீத அளவிற்கு இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்வதன் மூலம் வழங்குகிறது.
6 நாட்களுக்கு தொடர்ந்து பெட்ரோல் - டீசல் விலை அதிகரித்து வருகிறது:
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பு கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஜனவரி 6 ஆம் தேதி டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் லிட்டருக்கு 15 பைசா அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சென்னையில் லிட்டருக்கு 16 பைசா அதிகரித்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு ரூ .75.69, ரூ .78.28, ரூ .81.28 மற்றும் ரூ .78.64 ஆக உயர்ந்துள்ளதாக இந்தியன் ஆயில் வலைத்தளம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நான்கு பெருநகரங்களில் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ .68.68, ரூ. 71.04, ரூ .72.02 மற்றும் ரூ .72.58 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 78.6:
அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான அரங்கேறி வரும் சூடான அறிக்கைகளுக்கு மத்தியில் காலை முதல் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்து ரூ.78.69 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.72.69 ஆகவும் விற்கப்படுகிறது.
சென்னை _____ பெட்ரோல் - ₹ 78.69 _____ டீசல் - ₹ 72.69
டெல்லி _______ பெட்ரோல் - ₹ 75.74 _____ டீசல் - ₹ 68.79
மும்பை ______ பெட்ரோல் - ₹ 81.33 _____ டீசல் - ₹ 72.14
கொல்கத்தா___ பெட்ரோல் - ₹ 78.33 _____ டீசல் - ₹ 71.15
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.