சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்:-
எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று விளக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தேவை.
சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக சாடியுள்ளார்.
நான் அரசியலுக்கு வந்ததே ஜெயலலிதா விட்டு சென்ற பணியை தொடரவே. இதுவரை நான் என்ன செய்தேன் என்பது குறித்து கேட்டால் என்னிடம் பதில் இல்லை.
முதலமைச்சராவதற்கும் 33 ஆண்டுகள் சசிகலா உடன் இருந்தவர் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் உண்மைக்கு புறம்பாக செயல்படுகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை.
எல்லோருடைய கருத்துக்கும் பதில் அளிக்க விரும்பவில்லை. என்னுடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்கிறேன். கட்சி தொடங்குவது குறித்து பிப்ரவரி 24-ம் தேதி கூற உள்ளேன். அதுவரை பொறுத்து இருங்கள். மக்களின் ஆதரவை பெறுவதற்கு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.