பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - பாக்யராஜ் பேசியது சரியா?

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 20, 2022, 01:11 PM IST
  • மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரவசத்தில் பிறந்தவர்கள் - பாக்யராஜ்
  • பாக்யராஜ் சர்ச்சை பேச்சு
  • மோடியை புகழ்ந்த இளையராஜா
பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - பாக்யராஜ் பேசியது சரியா? title=

பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

நூலினை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ்,தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

Bhagyaraj

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்கள் நல்லதையும் பேச மாட்டார்கள்,பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் எனர்ஜி எனக்கு பிடித்திருக்கிறது” என்றார்.

மேலும் படிக்க | ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி

முன்னதாக மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்ட இளையராஜா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து; இளையராஜா தனது கருத்தைத்தான் கூறியிருக்கிறார். அவருக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என கேள்வி எழுப்பினர்.

இந்தச் சூழலில் தற்போது மோடியை விமர்சிப்பவர்களை குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்யராஜ் கூறுவது எந்த வகையில் ஞாயம் என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும், பாக்யராஜை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலின் ஆண் தாய் - சீனு ராமசாமி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News