வேதனையோடு சொல்கிறேன் பாஜகவில் சேருபவர்கள் பொண்டாடியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள், அண்ணன் தம்பியை மகனை பிரிக்கிறார்கள் பயமாக இருக்கிறது என மதுரை பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில்
மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசியபோது, அதானி பல்வேறு நாடுகளில் மோசடி செய்துள்ளார், ஆனால் அதனை செபி விசாரிக்கும் என்கிறார்கள். நாட்டில் எவ்வளவு அயோக்கியத்தனம் நடைபெறுகிறது, இதையெல்லாம் செய்யும் ஒருவர் இன்றைக்கு பிரதமராக இருக்கிறார். காலில் முள் குத்தினால் கண்ணில் கண்ணீ்ர்வரும் என்ற அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம் என மோடி பேசுகிறார்.
மேலும் படிக்க | அடித்து சொல்கிறேன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் - கார்த்திக் சிதம்பரம்!
ஆனால் தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலியில் மழை வந்தது எத்தனை பேர் இறந்தார்கள் எவ்வளவு வீடுகள் காணாமல் போனது எவ்வளவு பயிர் நாசமாக போனது ஹெலிகாப்டரில் வந்தார்கள். மாமி நிர்மலா வந்தாங்களே கனிமொழி கைய புடிச்சு குலுக்கினார்கள், நான் கூட கனிமொழியிடம் நிறைய பணம் வாங்கிட்டீங்களா என கேட்டேன். தூத்துக்குடிக்கு எதுவும் ஸ்பெஷலா போட்டுட்டீங்களானு கேட்டேன், பெண் என்றால் பேயும் இறங்கும் என உண்மையில் நினைத்தேன். கனிமொழியை கொண்டு நிர்மலா இறங்கும் என நினைத்தேன், அது தண்ணீரில் கூட இறங்கவில்லை.. அப்படியே தரையில் வந்து டாடா காமித்து விட்டு சென்றுவிட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி கேட்டோம், இந்தியாவின் கால் தமிழ்நாடு முள் குத்திவிட்டது, ஆனால் டெல்லியில் உட்கார்ந்துள்ள அவர்களின் கண்ணில் ஏன் கண்ணீர் வரவில்லை கண்ணீர் வரவில்லை என்றால் கண் குருடாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மை.
நாடாளுமன்றத்தில் எதை கேட்டாலும் ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜே என்பது தான் ஒரே பதிலாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே என கேட்டாலும், தமிழ்நாட்டுக்கு ரயில் என்னாச்சு என்றாலும் பாரத் மாதா கி ஜெய், ஸ்ரீ ராம் இப்படி தான் பதில் வருகிறது. கிருஷ்ணதேவராயர் தான் இந்த மண்ணில் அதிக அளவில் பெருமாள் கோவிலை கட்டியவர் அவருக்கு மருமகனே முஸ்லிம் தான், தூத்துக்குடியில அவ்வளவு பேர் இறந்தார்கள் மணிப்பூரில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தார்கள். அவர்களை போய் பிரதமர் பார்க்க கூடாதா? இந்துக்களுக்கும் இந்திக்கும் எதிரியென நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். இந்தியை நீங்கள் திணிப்பதால் நாங்கள் இந்திக்கு எதிரி. இந்துக்களுக்கு நாங்கள் ஏன் எதிரி என்கிறீர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிலேயே கீழ் உள்ள அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீதம் கொடுத்தது நாங்கள், 50 சதவீத மண்டல் கமிஷனை வி.பி.சிங் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவரோடு தோள்கொடுத்து நின்று சமூக நீதி காத்தவர் வி.பி.சிங் என கலைஞர் கூட்டி வந்தாரு நாங்களா இந்துக்களுக்கு எதிரி?
இந்து என்று நீங்கள் சொல்லக்கூடிய 90 முதல் 95 பேருக்கு நாங்கள் தான் எல்லா உரிமைகளையும் வாங்கிக் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்ட பதில் ராமர் கோவில் கட்டிய உத்திரபிரதேசத்தில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம், ஜெய் ஸ்ரீராம் பாரத் மாதா கி ஜே என கூறிக்கொள்ளும் குஜராத்தில் 24 சதவீதம், கேரளாவில் 11 சதவீதம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர் தமிழகம் 12 சதவீதம் உள்ளது. பொதுவுடைமை இயக்கமும் திராவிட இயக்கமும் இருந்த மண்ணில் 11 முதல் 13 சதவீதம் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளார்கள், ராமர் கோவில் கட்டிக்கொண்டு எல்லா கடவுளும் எனக்கு கீழ்தான் என்று சொல்லக்கூடிய உத்தரப்பிரதேசத்தில் 34 சதவீதம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளார்கள்
தேசிய பேரிடர் நிவாரண நிதி என ஒன்று வைத்திருக்கிறீர்கள் அந்த நிதியிலிருந்து பணம் கொடுங்கள் என்று நாங்கள் கேட்டோம், அதற்கு நிதித்துறை அமைச்சர் பதிலளிக்கிறார். மாநில பேரிடர் நிவாரண என இருக்கிறது அதற்கு நாங்கள் நிதி வழங்குகிறோம் எனக் கூறுகிறார். அதில் இதுவரைக்கும் ஆயிரத்து 500 கோடி கொடுத்திருக்கிறோம் என கூறுகிறார். மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது நாம் அனுப்பும் வரியில் ஏதேனும் நடந்து விடும் என்பதற்காக இயற்கையாகவே ஒரு சதவீதத்தை தன்னிச்சையாக ஒதுக்கி வைக்கிறார்கள், இப்படி ஒதுக்கிய பணம்தான் மாநில பேரிடர் நிவாரண நிதி. ஆனால் மாநிலங்களில் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற பெரு வெள்ளங்களில் மாநில அரசால் உதவ முடியாத நிலையில் மத்திய அரசு உதவ வேண்டியது தான் தேசிய பேரிடர் மேலாண்மை நிதி.
வேதனையோடு சொல்கிறேன் பிஜேபியில் சேருகிறவர்கள் முதலில் பொண்டாட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், அண்ணன் தம்பியை பிரிக்கிறான் மகனை பிரிக்கிறான் பயமாக இருக்கிறது. அஜித் பவர் மீது 70 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சென்றது நெருக்கடியை தாங்க முடியாமல் பாஜகவில் சேர்கிறார், அடுத்த நாள் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரத்தில் அழுக்கு துணியை உள்ள விட்டால் வெளியில் வெள்ளையாக வரும் அதுபோல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பிஜேபி என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வரலாம் இப்படி ஒரு மோடி மஸ்தான் வித்தையை கண்டுபிடித்த வித்தைக்காரர் தான் நரேந்திர மோடி என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ