நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் வெளியாகும் -MK ஸ்டாலின்!

இன்று இரவு அல்லது நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 11, 2019, 03:46 PM IST
நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் வெளியாகும் -MK ஸ்டாலின்! title=

இன்று இரவு அல்லது நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைப்பெற்ற திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது...

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இத்தேர்தலுக்கு திமுக தனது பிரசாரத்தை மிகப்பெரிய அளவில் 12500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி சபை கூட்டத்தின் மூலமாக பிரசாரங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்.

நியாயமாக பார்த்தால் தமிழகத்தில் 21 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வேண்டிய நிலை. ஆனால் 3 தொகுதிகளை தவிர்த்து 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்பதை இங்குள்ள தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. வழக்கை காரணமாக சொல்லி இருக்கிறார்கள்.

வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபல்ல. தடை உத்தரவு போடவில்லை. எனவே அந்த 3 தொகுதிகளுக்கு தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இதில் ஒரு உள்நோக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ‘திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை எப்போது அறிவிப்பீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஸ்டாலின் அவர்கள்,... "ஓரளவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்று பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிட்டது. இருந்தாலும் மரபுப்படி எல்லா கட்சிகளின் தொகுதிகளும் முழுமை அடைந்த பிறகு யாருக்கு எந்த தொகுதி என்பது வெளியிடப்படும். இன்று இரவோ அல்லது நாளையோ தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

Trending News