சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் -ஸ்டாலின்!

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்!

Last Updated : May 8, 2019, 07:18 PM IST
சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் -ஸ்டாலின்! title=

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்!

கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு தேனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முக ஸ்டாலின் தெரிவிக்கையில்., வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., 

"அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையிழந்து விட்டனர். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார். வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன" என குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல்கள் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையகப்படுத்தி அரசியல் பிரமுகர்கள் முறைகேடு செய்து வருவதாகவும் தெரிகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 11-ஆம் நாள் பீகாரில் நடைப்பெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு முறைகேடு நடைப்பெற்றதாக கூறி மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிரப்பித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கோவை விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. எனினும் இதுகுறித்து கோவை வருவாய் அலுவலர் சவுந்தர் ராஜன் தெரிவிக்கையில்., "வாக்குப் பதிவு ஆகாத 50 வாக்குப்பதிவு இயந்திரங்களே மாற்றம் செய்யப்பட்டது. பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் ஸ்டராங் ரூம் எனப்படும் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பதிவு ஆகாத இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையிலேயே இடமாற்றம் செய்யப்பட்டது" எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News