திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றபட்டது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.
பொது செயலர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்;
* முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி
* நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்து தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும்.
* இந்தி எதிர்ப்பு தீ பரவிட மாநிலம் முழுவதும், மாவட்டந்தோறும் கருத்தரங்கம் நடத்துவது.
* தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு; டாஸ்மாக் ஊழியருக்கு மாற்று வேலை.
* விவசாய பிரச்னையை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.
* குடிநீர் பிரச்னையை போக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வைர விழா காணும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.