அதிமுக ஆட்சியின் திட்டங்களைத் தான் திமுக அரசு திறந்து வைக்கிறது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியின் திட்டங்களைதான் திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2021, 03:20 PM IST
அதிமுக ஆட்சியின் திட்டங்களைத் தான் திமுக அரசு  திறந்து வைக்கிறது: எடப்பாடி பழனிசாமி title=

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், வெள்ளாளபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

இதைத் தொடர்ந்து பேசிய அவர் திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் தான் தற்போது மக்கள் அவதிபட்டு வருவதாகவும், வெள்ளம் பாதிப்பு குறித்து மாநில அரசு கணக்கெடுத்து நிவாரண தொகையினை மத்திய அரசிடம் கேட்கும் பட்சத்தில் எதிர்கட்சி என்ற முறையில் நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும்,கடந்த ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் உபரிநீர் மூலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் 60 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது திமுக அரசு அதனை மெத்தனமாக செய்து வருகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ | இந்துசமய அறநிலையத்துறை புதிய கல்லூரிகளை அனுமதியின்றி துவங்க தடை: நீதிமன்றம்

அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தியதால்தான் தற்போது அதிக அளவு  தண்ணீர் சேமிக்கப்பட முடிவதாகவும், வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக நாங்கள் குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிக்க திரானி இல்லாத ஸ்டாலின், மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்று கூறுகிறார் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இவற்றையெல்லாம் ஏதிர்க்கொண்டு தொடர்ந்து அதிமுக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும்.
அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது. திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை எனவும் நாளைய தினம் நானும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளோம் என -எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ALSO READ | தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News