இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 4, 2024, 09:01 PM IST
  • திருநெல்வேலியில் ஆய்வு செய்த அமைச்சர்.
  • கலெக்டர் வராததால் கோபம் அடைந்துள்ளார்.
  • உடனே போன் செய்த் திட்டியுள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு! title=

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் கடந்த ஜூலை மூன்றாம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநகராட்சி பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜு செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் காலியாக உள்ள திருநெல்வேலி கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை அறிவித்தது. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி திருநெல்வேலி மாநகராட்சிக்கும் ஆறாம் தேதி கோவை மாநகராட்சிக்கும் மேயர் மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ள நிலையில் இதில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர். 

மேலும் படிக்க | கேரள நிலச்சரிவில் அரசியல் செய்கிறது பாஜக: செல்வப்பெருந்தகை

திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் 44 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கட்சித் தலைமை கிட்டு என்ற ராமகிருஷ்ணனை வேட்பாளர் ஆக விரும்புகிறது. மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என அமைச்சர் நேரு பேசியதாக தெரிகிறது. பத்து நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். 25 வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ள அவர் மாமன்றத்திற்கு இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஐந்து முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட்டக் கழக செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் அவர் மேயராக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த முன்னாள் மேயர் சரவணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் ஆகியோர்களை தவிர 42 பேர் கலந்து கொண்டனர். 

கூட்டணி கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் ஐந்து பேரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சியின் அடிமட்ட தொண்டர் ஒருவர் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து நகராட்சி மற்றும் நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கலெக்டர் வராததால் அவருக்கு போன் செய்து அமைச்சர் கே.என்.நேரு திட்டியுள்ளார். " இரண்டு அமைச்சர் வந்திருக்கோம்..  கலெக்டர் எங்கய்யா இருக்க.. சொன்னா நாங்க வந்து பாத்துருவோம்ல" என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க | கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News