தமிழ்நாட்டில் பாஜகவா ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் - திமுக அமைச்சர்!

தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்.  

Written by - RK Spark | Last Updated : Mar 2, 2024, 02:19 PM IST
  • சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் 1 இடத்தில் உள்ளது.
  • வெளிநாட்டு சுற்றுலா வருகையில் 2 வது இடத்தில் உள்ளது.
  • சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி.
தமிழ்நாட்டில் பாஜகவா ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் - திமுக அமைச்சர்! title=

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.  கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியாவிலேயே தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  செயல்பட்டுக் வருவதாக தெரிவித்தார். சுற்றுலா துறையில் இந்தியாவில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், வெளிநாட்டு சுற்றுலா வருகையில் 2 வது இடத்தில் உள்ளதாகவும் இதனை முழுமையாக முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். 

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டு சூத்திரத்தில் மாற்றம், 0% ஆகும் அகவிலைப்படி

சுற்றுலா துறையை பொருத்தவரை வருமானம் வரக்கூடிய துறையாக உள்ளது என கூறிய அவர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும், வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.  இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் வாலாங்குளம் பகுதியில் ஏற்கனவே படகு இல்லம் அமைக்கப்பட்டது என குறிப்பிட்ட அவர் அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி இல்லாததால் கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த பகுதியில் கார் பார்க்கிங் ரெஸ்டாரன்ட் ஆகியவையும் அமைக்கப்படுகிறது எனவும் தற்போது அதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  அரசியல் குறித்தான தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் எனவும் கூறிய அவர் நீலகிரி தொகுதியில் ஆ ராசா நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றார்.  

திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும்: சிபிஐ பாலகிருஷ்ணன் 

தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வரலாற்று வெற்றியை பெறும், பாஜக தேசிய தலைவர்கள் தைரியம் இருந்தால் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும் என சிபிஐ பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஒசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார்.. முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன் பேசியபோது: தமிழகத்தில் பாஜக வேரூன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து, ஆளுங்கட்சி நாங்கள் என்கிற வகையில் நாடகமாடி வருகிறார்கள்.  அநாகரிகமாக விமர்சிக்க கூடிய தலைவராக நாகரிகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார், இவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.. 

மோடி வந்து சென்றால் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிடும் என நினைக்கிறார்கள்.. தைரியம் இருந்தால் அகில இந்திய பாஜக தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிக்காட்டட்டும் என்றதுடன் திமுக கூட்டணியில் சிபிஐ,சிபிஎம் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தது., விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிவடைய உள்ளது. திமுக, கூட்டணி பங்கீட்டை சுமுகமாக முடிக்கும். கூட்டணியில் எவ்வித சச்சரவும், சலசலப்பும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ய இருக்கிறது.. பாஜக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார். கர்நாடகாவிலும் இந்திய கூட்டணி மகத்தான வெற்றியை பெற வேண்டும்.. காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவோம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என பேசுவது சரியில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசினப்படுத்தும் போக்கு வேண்டாம். தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் எந்த பணியையும் தொடங்க முடியாது என்றார்.

மேலும் படிக்க | பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News