சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே. நான் தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்திருக்கிறேன். கலைஞர் இல்லாமல் செயற்குழு கூட்டம் நடைபெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை. அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தேன். முதல்வரிடம் கெஞ்சிக் கேட்டும் மெரினாவில் கலைஞருக்கு இடம் தர மறுத்தார். ஆனால் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். மெரினாவில் இடம் கிடைத்ததின் வெற்றி வழக்கறிஞர் குழுவுக்குதான் சேரும், அவர்களுக்கு நன்றி. பெரிய சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி அது.
இவ்வாறு பேசி தனது உரையை முடித்ததுடன், திமுக அவசர செயற்குழு கூட்டமும் நிறைவு பெற்றது.
When Kalaignar was in his last stage I held CM's hands&pleaded to fulfill his (Karunanidhi) last wish to be buried in Marina Beach but govt didn't agree: DMK Working President MK Stalin at the party's emergency executive meeting in Chennai. #TamilNadu pic.twitter.com/96gXmAk6xR
— ANI (@ANI) August 14, 2018
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என செயற்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சை தொடங்கினார்.
Party has lost our leader but I have lost the leader as well as my father: DMK Working President MK Stalin at the party's emergency executive meeting in Chennai. #TamilNadu pic.twitter.com/PjPgxjzQpC
— ANI (@ANI) August 14, 2018
திமுக செயற்குழுவில் பங்கேற்றுள்ள உறுப்பினர்கள் அடுத்தடுத்து கருணாநிதிக்கு புகழுரை கூறி வருகின்றனர்.
திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசிக்கிறார். மேலும் கருணாநிதி நிகழ்த்திய சாதனைகளை வரிசையாக பட்டியலிட்டார்.
Tamil Nadu: DMK's emergency executive meeting is underway in Chennai. pic.twitter.com/Huc9td6eYr
— ANI (@ANI) August 14, 2018
திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.
திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன், ஜெ.அன்பழகன்,கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகை.
Chennai: DMK Working President MK Stalin arrives for the party's Emergency Executive Meeting. #TamilNadu pic.twitter.com/wKarhek2Qy
— ANI (@ANI) August 14, 2018
திமுக அவசர செயற்குழு கூட்டத்திற்கு 65 மாவட்டங்களில் இருந்து தலா 3 பேருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தலைமை செயற்குழு கூட்டம் இதுவாகும்
திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து 11 நாளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7 ஆம் நாள் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். அவரது மறைவை தாங்க முடியாமல் திமுக தொண்டர்கள் கண்ணீருடன் தலைவா எழுத்து வா... தலைவா எழுத்து வா... என்று கோசம் இட்ட நிலையில் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அடுத்த நாள் ஆகஸ்ட் 8 அன்று மாலை சுமார் 4 மணியளவில் சாலையின் இருபுறமும் திமுக தொண்டர்கள் படை சூழ கருணாநிதியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணாவின் பக்கத்தில் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 9 ஆம் நாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக-வின் முக்கிய தலைவர்கள் இருந்தனர். வரும் ஆகஸ்ட் 14 ஆம் நாள் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில், திமுக தலைவர் யார்? என்பது போன்ற முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க. அழகிரி அவர்கள் தனது குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், என் அப்பாவிடன் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றேன். அது தற்போது மக்களுக்கு தெரியாது, காலம் வரும்போது மக்களுக்கு தெரியவரும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானதாக தான் இருக்கும். தலைவர் கலைஞரின் உன்மையான, விசுவாசமான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அனைவரும் என்னை ஆதரித்துக்கொண்டு இருக்கின்றனர். கட்சி தொடர்பான என் ஆதங்கத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். நான் தற்போது திமுக-வில் இல்லை., எனவே செயற்குழு பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம். ஏற்கனவே திமுகவின் தென் மண்டல செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் மு. க. அழகிரி இருந்துள்ளார். ஆனால் அவரின் செயல்பாடுகள் திமுக-விற்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி திமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மு. க. அழகிரியை, அப்போதைய திமுக-வின் தலைவர் கருணாநிதி நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க. அழகிரி ஒரு பக்கம் இப்படி கூறியுள்ள நிலையில், செயல் தலைவராக உள்ள ஸ்டாலினை, திமுக தலைவராக்க வேண்டும் என கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நாளை திமுக செயற்குழு நடைபெற உள்ளது. இந்த சவால்களை சமாளித்து திமுக-வை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வாரா? என்ற கேள்வி தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் எழுந்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது, கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்படலாம் என தெரிகிறது.