கமல்-ன் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி கொடி விளக்கம் தெரியுமா?

நடிகர் கமல் நேற்று மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் கோடி ஆகியவற்றை அறிமுகபடுத்தியதையடுத்து கட்சிக்கொடியின் நிறத்துக்கு விளக்கம் தந்துள்ளார்.

Last Updated : Feb 22, 2018, 04:05 PM IST
கமல்-ன் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி கொடி விளக்கம் தெரியுமா?  title=

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பின் கமல் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது; என் கட்சியின் கொள்கைகள் குறித்து பலர் கேட்கிறார்கள். ஆட்சியாளர்கள் என்னென்ன செய்யவில்லையோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை. அடுத்த மாத மத்தியில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம் தொடங்கப்படும்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என்பதே என் பொறுப்பு. திராவிடத்தையும், தேசியத்தையும் இழக்கவில்லை; கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என் கொள்கை. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்கள் செழிக்க வழி செய்வோம் என கமல்ஹாசன் தெரிவித்தார். 

வேலைகளைத் தொடர்வதற்கான பயணங்களை மேற்கொள்ள இருக்கிறோம். மக்கள் கூடியது சினிமா நட்சத்திரத்தை பார்க்க அல்ல; எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதை விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறினார். 

இதையடுத்து, தனது கட்சிகொடிக்கு கமல் தந்த விளக்கம்: 

கருப்பு நிறம் - திராவிடம் 

சிவப்பு நிறம் - உழைப்பு 

வெள்ளை - தூய்மை 

ஆறு கரங்கள் - ஆறு மாநிலத்தை குறிக்கும். 

நட்சத்திரம் - மக்கள் என்று அவர் விளக்கம் தந்துள்ளார். 

Trending News