50 ஆண்டுகால வரலாற்றில் செயலற்ற ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின்

பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை கடுமையாக சாடிய திமுக தலைவர்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Jan 10, 2019, 06:07 PM IST
50 ஆண்டுகால வரலாற்றில் செயலற்ற ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின்
File photo
திமுக சார்பில் "மக்களிடம் செல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்" என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி சபைக் கூட்டம் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற உள்ளது.
 
இந்தநிலையில், இன்று திருவரங்கம் தொகுதி, நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் மக்கள் சந்தித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அதேபோல சீகம்பட்டி ஊராட்சி மணப்பாறை ஒன்றியத்தில் உரையாற்றும் போது பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை கடுமையாக சாடினார். 
 
அப்பொழுது அவர், நான் பொது வாழ்க்கைக்கு வந்து 50 ஆண்டுகாலம் ஆகிறது. எத்தனையோ முதலமைச்சர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்த அரசுத் துறையும் தோல்வியடைந்து, செயலற்ற ஒரு முதல்வர் என்றால், அது எடப்பாடி பழனிசாமி தான் எனக் கூறினார்.