லோக்சபா தேர்தலில் தபால் வாக்குகளை கடைசியாக எண்ணக்கூடாது, முதலிலேயே எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது. இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் கூட திமுக இந்த கோரிக்கையை பிரதானமாக வலியுறுத்த, அக்கூட்டணியைச் சேர்ந்த மற்றக்கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன் பின்னணியில் பாஜகவின் தேர்தல் சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. வட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தபால் வாக்கு எண்ணும்போது, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் இருக்கும் தொகுதியின் வெற்றி தோல்வி மாற்றியமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தன.
இது குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி பேசும்போது, “முதலில் இவிஎம் வாக்குகளை எண்ணிவிட்டு, தபால் வாக்குகளை இறுதியில் எண்ணும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே ராதாபுரத்திலும் பிகாரிலும் இப்படித்தான் பிரச்னை எழுந்தது. தபால் வாக்குகளை இறுதியில் எண்ணினால் வடமாநிலங்களில் அதிக பிரச்னை ஏற்படலாம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, தபால் வாக்குகள் சரியாக காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்படும். கட்சி முகவர்களுக்கு எண்ணிக்கை தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கினாலும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும் தெளிவாக கூறியுள்ளது.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பார்வையாளர் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படும். 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ண அதிக மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி, சோழிங்கநல்லூர் 30, கவுண்டம்பாளையம் 20, பல்லடம் 18 மேஜைகள் அமைப்பு. மற்ற அனைத்து இடங்களிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ நாளை காலை 11 மணியளவில் வெற்றி நிலவரம் குறித்த டிரெண்ட் முழுமையாக தெரிந்துவிடும்.
மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ