தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்!!

தமிழகத்தில் காலியாகவுள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது..!

Last Updated : Sep 30, 2020, 12:15 PM IST
தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்!! title=

தமிழகத்தில் காலியாகவுள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது..!

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில், இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மேற்குறிப்பிட்ட 4 மாநில தலைமைச் செயலாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த முடிவினை வெளியிட்டுள்ளது. 

latest tamil news

latest tamil news

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது.... "தமிழகத்தின் திருவொற்றியூர், குடியாத்தம், அசாமின் ரங்கபாரா, ஷிப்சாகர், கேரளாவின் குட்டநாடு, சவாரா, மே.வங்கத்தின் பலகட்டா சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில் கடினம் மற்றும் சில பிரச்னைகள் உள்ளதாக 4 மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | அக்., 31 வரை தமிழகத்தில் மீண்டு முழு ஊரடங்கு... எது இயங்கும்?... இயங்காது?...

அசாம், கேரளா, தமிழகம் மற்றம் மேற்குவங்க தலைமை செயலகத்தின் பதவிக்காலம் முறையே, 31.05.2021, 01.06.2021, 24.05.2021, 30.05.2021 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட 7 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கு வரும் நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதியில் தேர்தல் நடத்தப்படும். முடிவுகள் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும்" என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Trending News