காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை

சேலம் அருகே காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2022, 04:06 PM IST
  • காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயம்
  • தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் மாணவன்
  • சேலம் அருகே நடந்த துயரச் சம்பவம்
காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை title=

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே காமாக்காபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் அப்பகுதியில் தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நந்தஅழகன். 20 வயதான அவர், சேலம் மின்னாம்பள்ளி உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் அதே கல்லூரியில் படித்துவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

மேலும் படிக்க | புருஷன் இவரு தான் ஆனா புள்ளைக்கு அப்பா அவரு - காவல்நிலையத்தில் நிஜமான வடிவேல் காமெடி!

தற்போது அந்தப் பெண்ணின் உறவினர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால்  பெண் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலன் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் நந்த அழகனிடம் தெரிவித்துள்ளனர். காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்தியைக் கேட்டு மன உளைச்சலில் இருந்த அவர், நேற்றிரவு 11 மணி வரை அந்த பெண்ணுடன்  போனில் பேசியதாக கூறப்படுகிறது.  பின்னர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. மேலும், இன்ஜினியரிங் மாணவன் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக இளைஞர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | டாஸ்மாக் கடை வைத்தால் அடித்து நொறுக்குவோம் குமுறும் கோயமுத்தூர் பெண்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News