இந்தியாவில் எந்தனை ஆன்லைன் மோசடிகள் நடந்தாலும், எத்தனை பண மோசடிகள் நடந்தாலும் மக்களில் இன்னும் பலர் விழுப்புணர்வு பெறாமல் இன்னும் ஏமாந்து வருகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதன் தொடர் கதையாக தமிழகத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெரியார்நகரில் சுபாஷ் சந்திரபோஷ் - பீனா (வயது 46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பீனாவின் செல்போனுக்கு பான் கார்டு அப்டேட் செய்வது குறித்து எஸ்எம்எஸ் வந்தது.
அண்மையில் பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பது குறித்த பேச்சுக்கள் வழக்கத்தில் இருந்தது, அதன் அடுத்த பகுதியாக இந்த அப்டேட் வந்துள்ளது என பீனா எண்ணினார்.
மேலும் அந்த பான் கார்டு புதுப்பித்தல், தகவல் சேர்ப்பு குறித்த வழிக்காட்டுதலின்படி பீனா செய்தார்.
மேலும் படிக்க | லண்டனில் வேலை வேண்டுமா? என்கிட்ட வாங்க: மோசடி ஆசாமி கைது
எஸ்எம்எஸ்ஸில் இருந்த லிங்கினை கிளிக் செய்துள்ளார். அந்த லிங்கை தொட்டவுடன் ஒரு இணையதள திரை திறந்தது. அதில் வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டன.
பீனாவும் கேட்கப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்து உள்ளார்.
பின்னர் அவரது செல்போனுக்கு வரும் ஓடிபியை உள்ளிடுமாறு கேட்டது. சற்றும் யோசிக்காத அவர் ஓடிபியையும் உள்ளிட்டார்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பீனாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 920 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பீனா இதுகுறித்து அவரது வங்கிக்குச் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார்.
அப்போது வங்கிப் பணியாளர் சரிப்பார்த்துவிட்டு, ஆன்லைன் மோசடியில் பீனா சிக்கியுள்ளதை அவருக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் பீனா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் படிக்க | விநாயகருக்கு கலரடித்து - அப்பாவிக்கு விபூதியடித்த மந்திரவாதி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G