Mettupalayam Flood : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய பில்லூர் அணை கடந்த ஒரு வாரமாக பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. அதிலும் குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கக்கூடிய கேரளா அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
மலைப்பாங்கான மாவட்டமான நீலகிரியில் பெய்யும் மலையில் இருந்து வரும் அதிகமான மழைநீரால் பில்லூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக உயர்ந்து அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அணைக்கான நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 97 அடி என்ற இலக்கை எட்டியது
இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதங்கள் வழியாக தற்பொழுது 14000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | திருமணமான இந்திய பெண்களுக்கு வேலை இல்லை!! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்
இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பளையம், லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என கூறப்படுவதால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் வருவாய்த் துறையினர் தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ