நீட் தேர்வு கட்டாயம்.. உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த தமிழக அரசு

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்பதே உண்மை நிலவரமாக இருக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 4, 2020, 02:12 PM IST
நீட் தேர்வு கட்டாயம்.. உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த தமிழக அரசு title=

சென்னை: நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) எழுதி தேர்ச்சி பெற்றால் தான், இனி மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதாவது மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகள் முன்பு இந்தியா முழுவதும் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட் விலக்கு தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமால் நிராகரித்து விட்டார். ஆனால் ஜனாதிபதி நிராகரித்த விசியம் எங்களுக்கு தெரியாது என தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் தமிழக அரசு நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டிலும் அதை செயல்படுத்துவதிலும் உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையோடும் நடந்து கொள்ள வேண்டும். நீட் விவகாரம் தொடர்பாக மக்களுக்கு ஏன் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை? நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏன் அனுப்பி வைக்கவில்லை? என சரமாரியாக கேள்விகளை கேட்டது.

ஆனால் மறுபுறம், மத்திய அரசு நாடு மழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதால், தமிழ்நாடு மாநிலத்திற்கு தனியாக விலக்களிக்க முடியாது. அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும். நாடு முழுவதும் ஒரே முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் விலக்கு என்றே பேச்சுக்கே இடமில்லை என தெளிவாக மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருவதால், தமிழக மாணவ - மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரியலூர் மாணவி அனிதாவில் தொடங்கி ரிதுஸ்ரீ, வைஷியா வரை பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு நீட் தேர்வு தான் காரணமாக இருந்திருக்கிறது. இந்த தற்கொலை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்பதே உண்மை.

ஆனாலும் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்தநிலையில், நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News