தமிழகத்தின் முதல்வர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி!!

Last Updated : Feb 16, 2017, 12:26 PM IST
தமிழகத்தின் முதல்வர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி!! title=

இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். கவர்னரை, எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்

நேற்று இரவு எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பானது வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் இந்த சந்திப்பின் போது, சாதகமான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க, கவர்னர் வித்யா சாகர் ராவ் நேரம் ஒதுக்கியிருந்தார். மேலும் இந்த அழைப்பானது ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று ஆட்சியமைப்பது குறித்து முக்கிய முடிவை ஆளுநர் எடுப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இந்த தகவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

Trending News