குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது; தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம்!

குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது!!

Last Updated : Jan 30, 2020, 02:55 PM IST
குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது; தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம்! title=

குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்தும், குரூப்-4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய, ஆடு மேய்க்கும் தொழிலாளி உள்ளிட்டோர் அதீத தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. இதன்மூலம், டிஎன்பிஎஸ்சி.யின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலையில், இந்த புகார் குறித்து, சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. குருப்-4ல் மட்டுமின்றி, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

6ஆவது நாளாக, விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் சிபிசிஐடி போலீசார், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்கள் என இதுவரை 14 பேரை கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில், குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் முறைகேடு காரணமாக குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, “ குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும். ஒட்டுமொத்த தேர்வும் ரத்து கிடையாது. குரூப் 4-ன் அடுத்தக்கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 9300 காலிப் பணியிடங்களுக்கான பணிகளை நிரப்பும் பணி கலந்தாய்வு மூலம் நடைபெறும். தேர்வு எழுதியவர்கள் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது. 

Trending News