மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இப்பள்ளிக்கு 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி பணிக்கு வந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் இரு ஆசிரியைகளுக்கும் தனித்தனியாக பாலியல் ரீதியிலான தொல்லை அளித்துள்ளார்.
இதனை ஆசிரியைகள் கண்டித்த நிலையிலும், அவர்களிடம் செல்போனில் தலைமை ஆசிரியர் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்து பணிமாறுதல் கிடைத்த நிலையில் அவர்களை பணியில் இருந்து ஜோசப் ஜெயசீலன் விடுவிக்கவில்லை.
மேலும் படிக்க | அரசு விடுதிக்குள் ஆட்சியர் திடீர் ‘ரெய்டு’ - வசமாக சிக்கிய வார்டன்.!
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு ஆசிரியை மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் செய்த நிலையில் தலைமை ஆசிரியர் தலைமறைவாகி இருந்தார்.
இதனையடுத்து, ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் மொட்டை அடித்து தாடி வைத்து வேறு தோற்றத்திற்கு மாறி போலீஸாரிடம் சிக்காமல் இருந்தார்.
தன் அடையாளங்களை மாற்றிக்கொண்ட தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருந்து பின் மதுரைக்கு வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுரை தெற்குவாசல் பந்தடி தெருவில் ஜோசப் ஜெயசீலன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீஸார் ஜோசப் ஜெயசீலனை இன்று கைது செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே கீரைத்துறை பள்ளியில் வேலை பார்த்த ஒரு ஆசிரியையுடன் ஜோசப் ஜெயசீலனுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த ஆசிரியையின் வீட்டில் பதுங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் பள்ளியில் இதேபோல் வேறு யாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | பரிகாரம் செய்வதாக மாணவியை பலாத்காரம் செய்த பூசாரி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR