தமிழக மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
இதன் காரணமாக, 11.11.2022, அதாவது இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
12.11.2022 அன்று
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள், அதாவது 13.11.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கொள்ளிடம் (மயிலாடுதுறை) 11, பரங்கிப்பேட்டை (கடலூர்) 10, சிதம்பரம் AWS (கடலூர்) 9, கடலூர், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 8, தரமணி ARG (சென்னை), செம்பனார்கோயில் (மயிலாடுதுறை), அண்ணாமலை நகர் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), காரைக்கால், திருப்பூண்டி (நாகப்பட்டினம்), புதுச்சேரி, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), காட்டுக்குப்பம் Agro (காஞ்சிபுரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 7, சென்னை விமான நிலையம் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), நாகப்பட்டினம், திருக்குவளை (நாகப்பட்டினம்), தொண்டையார்பேட்டை (சென்னை), சிதம்பரம் (கடலூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) , நந்தனம் ARG (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 6, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), குப்பநத்தம் (கடலூர்), ஆவடி (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 5, டிஜிபி அலுவலகம் (சென்னை), புவனகிரி (கடலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கே.எம்.கோயில் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 4, வடகுத்து (கடலூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மோகனூர் (நாமக்கல்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), நீடாமங்கலம் திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), மரக்காணம் (விழுப்புரம்), பெரம்பூர் (சென்னை), நன்னிலம் (திருவாரூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), கொடவாசல் (திருவாரூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வலங்கைமான் (திருவாரூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), வானமாதேவி (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருவாரூர், வந்தவாசி (திருவண்ணாமலை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), பெலாந்துறை (கடலூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை) தலா 3, மன்னார்குடி (திருவாரூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), கிளாசெருவை (கடலூர்), வளவனூர் (விழுப்புரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பண்ருட்டி (கடலூர்), செங்கல்பட்டு, கோலியனூர் (விழுப்புரம்), ஆனந்தபுரம் (விழுப்புரம்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), விருதாச்சலம் (கடலூர்), வளத்தி ( விழுப்புரம்), சூரப்பட்டு (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), குருங்குளம் (தஞ்சாவூர்), பாண்டவையார் (திருவாரூர்), செய்யார் (திருவண்ணாமலை), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), நெமூர் (விழுப்புரம்), விழுப்புரம் (விழுப்புரம்), (தஞ்சாவூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), திண்டிவனம் (விழுப்புரம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்) தலா 2, பேராவூரணி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), வெட்டிகாடு (தஞ்சாவூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), மணமேல்குடி (தஞ்சாவூர்), புதுக்குடியிருப்பு (கள்ளக்குறிச்சி), கேதார் (விழுப்புரம்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), திருத்தணி (திருவள்ளூர்), ஹரூர் (தருமபுரி), வேப்பூர் (கடலூர்), செந்துறை (அரியலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கஞ்சனூர் (விழுப்புரம்), நந்தியார் (திருச்சி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), திருச்சி விமானநிலையம், முகையூர் (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அரசூர் (விழுப்புரம்), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), எறையூர் (பெரம்பலூர்), வல்லம் (தஞ்சாவூர்), அரக்கோணம் ( ராணிப்பேட்டை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), தென்பரநாடு (திருச்சி), புள்ளம்பாடி (திருச்சி), துவாக்குடி (திருச்சி), கொடநாடு (நீலகிரி), காட்டுமயிலூர் (கடலூர்), நாமக்கல் (நாமக்கல்), குடிதாங்கி (கடலூர்), புடலூர் (தஞ்சாவூர்), தொண்டி (ராமநாதபுரம்), செம்மேடு (விழுப்புரம்), திருமானூர் (அரியலூர்), ஆரணி (திருவண்ணாமலை), வி.களத்தூர் (பெரம்பலூர்), வீரகனூர் (சேலம்), சேலம் (சேலம்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை), ஆயின்குடி (புதுக்கோட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பர்லியார் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), மணம்பூண்டி (விழுப்புரம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
11.11.2022 மற்றும் 12.11.2022 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.11.2022 அன்று குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.11.2022 அன்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.11.2022 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில்
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ