'தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு'- இந்திய வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Updated: Nov 12, 2019, 12:54 PM IST
'தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு'- இந்திய வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து மீண்டும் காற்று வீச தொடங்க உள்ளதால் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. புல் புல் காரணமாக காற்றின் திசை மாறி மழை குறைந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கோயம்புத்தூர் ஆலியார் அணை பகுதியில் 7 சென்டி மீட்டர் மழையும், சிவகிரியில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.