அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: IMD

இன்று வானிலை ஆய்வு மையம் அளித்த மழைக்கான எச்சரிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2021, 03:43 PM IST
  • அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
  • மழை எச்சரிக்கை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: IMD title=

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வானிலை ஆய்வு மையம் (IMD) அளித்த மழைக்கான எச்சரிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
 
மழை எச்சரிக்கை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், "வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கோவை சின்னக்கல்லார் பகுதியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தொடர் மழையால் குட்டித் தீவாய் ஆன கன்னியாகுமரி: நிவாரணப் பணிகள் தீவிரம்

நாளை மறுநாளும் இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை (Heavy Rain) பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசிபோன்ற பிற மாவட்டங்களிலும் ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும். 

சென்னையில் (Chennai) அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டுமின்றி திருவள்ளூரிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

கனமழைக்கான வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கும் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல், கேரளா, கர்நாடக, கோவாவின் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று தொடங்கி 15 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.  

ALSO READ: MK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News