தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணி தர்மராஜ் பட்டுத்துறை அருள்வேல் கணேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக கையாளும் விதமாக கண்ணடியான் கால்வாய் வழியாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு முறையாக அரசிதலில் வெளியிடப்படவில்லை மற்றும் மாற்று வழி குறித்தும் பரிசீலிக்கப்படவில்லை ஆகிய இரு காரணங்களால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது.
மேலும் படிக்க | பாஜக உறுப்பினர் அட்டையில் தமிழிசை கையெழுத்து... அப்போ அண்ணாமலை நிலைமை?
இதனை தொடர்ந்து அரசு தரப்பில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட அரசிதலில் கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அரசு இதழ்களும் தமிழக அரசின் வரம்புக்குட்பட்டது. அதேபோல நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அருகில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாற்றிடமாக பரிசீலித்துள்ளனர். ஆனால் அவ்வழி பொருத்தமானதாக அமையாது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மனுதாரர்கள் தங்களது நிலத்தை வழங்காத காரணத்தினாலேயே அதை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கதாக அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ