இன்று நிலவரம் எப்படி? மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

இன்று 2,413 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,06,444 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 5, 2020, 08:40 PM IST
இன்று நிலவரம் எப்படி? மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை! title=

சென்னை: தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 621 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,272 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் இன்று 2,413 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,06,444 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

No description available.

ALSO READ |  சட்டம் தன் கடமையை செய்யும்! வேல் யாத்திரையை கைவிடுவதே பாஜகவுக்கு நல்லது -அமைச்சர் ஜெயக்குமார்

19,061 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 80,192 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 1,00,52,393* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்: 05-11-2020
கொரோனா பாதிப்பு - 2,348 
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 19,061 
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 80,192 
குணமடைந்து வெளியேறியவர்கள் -  2,413 
இறப்பு - 28 

No description available.

No description available.

No description available.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News