டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி? சுகாதாரத்துறை விளக்கம்

டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2018, 02:49 PM IST
டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி? சுகாதாரத்துறை விளக்கம் title=

தமிழ்நாடு மற்றும் புதுவையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றின் தாக்கமும், பாதிப்பும் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பன்றி காய்ச்சல் வைரஸ் அதிகமாக பரவக்கூடிய காலமாகும். இதுக்குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-

தமிழக அரசு டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 25 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் வார்டுகளும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

பன்றி காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலியாகும். ஒரு சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்று போக்கும் ஏற்படலாம். பன்றி காய்ச்சல் தொற்றினால் உயிர் இழப்பு ஏற்படுவது இல்லை. பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பன்றி காய்ச்சல் குணமாக்க OSeltamivir என்கிற சக்தி வாய்ந்த மருந்து நம்மிடம் உள்ளது. எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. 

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் 044-24350496, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற ஆலோசனை பெறலாம். இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News