ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்ச் 2-ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த இருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து சாதிக் பாட்ஷா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாணவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.
தற்போது நெடுவாசல் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவு தரும் நிலையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.