விஜய்யுடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் - அமீர் அதிரடி!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் வேதனை அளிக்கிறது, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக பார்க்க வேண்டும் என்று அமீர் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 28, 2024, 02:43 PM IST
  • அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும்.
  • அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.
  • அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது - அமீர்.
விஜய்யுடன் அரசியலில் இணைந்து செயல்பட தயார் - அமீர் அதிரடி! title=

திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திரைபட இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் பற்றிய படம் அதிக அளவில் வருகிறது என்ற கேள்விக்கு, கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாதுஎன்றார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது என்றார்.

மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு வந்த சோதனை! செய்வினை செய்த பெண் மீது புகார்!

 

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது என்றார். அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, திராவிடம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்தால் மட்டுமே திராவிடம் வேண்டும், வேண்டாம் என்று தெரியவரும். ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம் ஆகும். திராவிடம் என்பது நம்முடைய மண், ரத்தம் உணர்வுகளில் கலந்து இருப்பது. ஆகையால் அனைவரும் திராவிடர்கள் தான், திராவிட சிந்தனைகள் உள்ளவர்கள் தான். பாசிச அரசியலுக்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ அது திராவிட அரசியலாகும். பாசிசதிற்கும், ஆரியத்திற்கும் எதிராக செய்யக்கூடிய அரசியல் திராவிட அரசியல் எனப்படும்.

தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, சட்ட ஒழுங்கு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஒரு வெள்ளை வேஷ்டியில் 4-5 கரைகள் இருந்தால் எப்படி நம் கண்களுக்கு தெரியும். அதுபோல தான் சட்ட ஒழுங்கு எல்லா காலத்திலும் சரி செய்யப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து, அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்ட ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பது பேசுவது ஒரு அரசியலாகும் என்றார். நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால் நிச்சயம் நான் செல்வேன். 

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு குறித்த கேள்விவிக்கு, ஒன்றிய அரசின் நிலைப்பாடு இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் வேதனை அளிக்கிறது என்றார். அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக பார்க்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கினால் எனக்கு மகிழ்ச்சி என்றார். விஜய் - சீமான் யாருடன் அரசியலில் பயணம் செய்ய உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, விஜய் உடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருடன் இணைந்து அரசியல் பயணம் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை - அமைச்சர் ஐ பெரியசாமி!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News