புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,
அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும். அதிமுகவில் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பாஜகவில் செய்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்: அண்ணாமலை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை என்று திமுக கூறியது ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது தயாராகவில்லை பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாக கருதுகின்றனர். திமுக தங்களை பெருமை படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர மக்கள் பிரச்சினையை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற நிலையில் அதிமுக இரண்டாக பிரிந்தது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் சசிகலாவிற்கு எதிராக பல்வேறு புகார்களை முன்வைத்தார்.
இதனையடுத்து சில தினங்களில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இணைந்தனர். அத்துடன் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்து தீர்மானமும் நிறைவேற்றினர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு இவை அனைத்தும் பின்னடைவாக அமைந்தது.அவ்வப்போது அதிமுகவில் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பேன் என கூறிவருகிறார். இதனை அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் சசிகலா இணைந்தால் கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR