கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது!!

Updated: Nov 13, 2019, 06:01 PM IST
கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது!!

டெல்லி: கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன், பின் என ஆண்டிற்கு இரண்டு முறை நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட, 1286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகளின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டு தரைமட்டத்திலிருந்து 17.5 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது சராசரியாக 3 மீட்டர் அளவு உயர்ந்து 14.5 மீட்டர் என்ற அளவில் இருப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், ‘கடந்த ஆண்டு தரைமட்டத்திலிருந்து 17.5 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் உள்பட அனைத்து அணைகளிலும் கடந்தாண்டை காட்டிலும் அதிக நீர்இருப்பு உள்ளது. நாள் ஒன்றுக்கு 1900 மில்லியன் லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது’ என்றும் தகவல் கூறியுள்ளது.