தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பெரும் ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக குடும்ப உறுப்பினர்கள் பங்குதாரர்களாக இருக்கும் ஜீ ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை ஆறு மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் - தொல். திருமாவளவன்!
ஜி ஸ்கொயர் தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், அரக்கோணம், கோவை, உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கர் நிலங்களை விற்பனை செய்துள்ளனர்.
அதேபோன்று பெங்களூரு ஹைதராபாத் மைசூர் ஆகிய இடங்களிலும் நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக கருதப்படும் லோட்டஸ் பாலா என்பவரிடம் வருமான வரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஊட்டிக்கு செல்ல திட்டமா? இந்த இடத்தை மறக்காம பாத்துருங்க!
இந்த சோதனையானது, மெகா சோதனையாகவும் மாறலாம் என வருமான வரி துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்தப்படும் சோதனையானது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 6:00 மணி முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
திமுகவின் மீது சுமத்திய அவதூறுகளுக்கு ஆதாரங்களைக் கேட்டு திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாஜகவின் தமிழகத் தலைவரான அண்ணாமலை மீது, இந்த புகார் தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ