தமிழ்நாட்டில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும்; எங்கு? எப்போ? முழுவிவரம்

தமிழகத்தில் தனியார் ரயில்களை இயக்குவதற்கு 14 வழித்தடங்களை இந்திய ரயில்வே (Indian Railways) அடையாளம் கண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2020, 11:31 AM IST
  • தமிழகத்தில் 14 தனியார் ரயில்களை இயக்கப்படும்.
  • தினசரி 9 ரயில்களும், 4 ரயில்கள் வாரத்திற்கு ஒருமுறை என இயக்கப்படும்.
  • இந்த நடவடிக்கை ரயில்வேயை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்று மதுரை எம்.பி. சு வெங்கடேசன்
தமிழ்நாட்டில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும்; எங்கு? எப்போ? முழுவிவரம் title=

சென்னை: தமிழகத்தில் தனியார் ரயில்களை (Private trains in Tamil Nadu) அறிமுகப்படுத்தவும் மற்றும் இயக்குவதற்கு 14 வழித்தடங்களை இந்திய ரயில்வே (Indian Railways) அடையாளம் கண்டுள்ளது. அதில் தினசரி 9 ரயில்களும், 4 ரயில்கள் வாரத்திற்கு ஒருமுறை என இயக்கப்படும். ரயில்கள். லோகோ பைலோட்ஸ்மற்றும் காவலர்களைத் தவிர, ரயில்கள் முழுக்க முழுக்க தனியார் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். இவற்றில் பத்து ரயில்கள் பின்வரும் வழிகளில் இயங்கும். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், புது டெல்லி, மும்பை, ஹவுரா, ஜோத்பூர் பகுதி மற்றும் மங்களூரு வரை செல்லும்.

பிற செய்தி வாசிக்க | உலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் இந்தியாவில் அமையவுள்ளது; எந்த நகரத்தில் தெரியுமா?

மீதமுள்ள நான்கு ரயில்கள் புதுச்சேரி - செகந்திராபாத் (Via Chennai), எர்ணாகுளம் - கன்னியாகுமரி, கோயம்புத்தூர் - திருநெல்வேலி மற்றும் கொச்சுவேலி - குவஹாத்தி வழித்தடங்களில் இயங்கும். "மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களுக்கு செல்லும் நான்கு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படலாம், மீதமுள்ள ஆறு ரயில்கள் சென்னை மத்திய மற்றும் எக்மோரிலிருந்து (Chennai Egmor) இயக்கப்படலாம். இந்த வழித்தடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படாது. அந்த வழிகளில் ரயில்களை இயக்க மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிற செய்தி வாசிக்க | அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே

தனியார் ரயில்களை (Private Trains) இவ்வளவு அதிக வேகத்தில் இயக்க அனுமதிப்பது குறித்து மண்டல அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். "இந்த ரயில்கள் 160 கிமீ வேகத்தில் இயங்குவதற்கான தடங்களை மேம்படுத்த எந்த திட்டமும் இல்லை" என்று அந்த அதிகாரி கூறுகிறார். "அரக்கோணம் - ஜோலர்பேட்டை (Arakkonam - Jolarpettai) பிரிவில் ஒரு சில வழித்தடங்களை தவிர்த்து, பிற பாதைகளில், ரயில்களை 110 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்எனவும் கூறினார்.

‘முழுமையாக தனியார்மயமாக்கல்’
தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரயில்களை இயக்க ரயில்வே அனுமதித்திருந்தாலும், இந்த நடவடிக்கை ரயில்வேயை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்று மதுரை எம்.பி. சு வெங்கடேசன் (MP Su Venkatesan) தெரிவித்தார். "இது இறுதியில் நிரந்தர ரயில்வே ஊழியர்களின் பங்கைக் குறைக்கும். இதனால் தனியார்மயமாக்கப்படும்." என்றார்.

Trending News