தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தலைமையில் அமைகிறதா? கருத்து கணிப்பின் முழு விவரம்

ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Polls 2021) திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 3, 2021, 02:38 PM IST
தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தலைமையில் அமைகிறதா? கருத்து கணிப்பின் முழு விவரம் title=

சென்னை: தற்போது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தான் அடுத்த தமிழத்தில் அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளது என்று தினத்தந்தி குழுமத்திற்கு சொந்தமான தந்தி டிவியின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 5 முதல் மார்ச் 28 வரை நடத்தப்பட்ட தந்தி டிவியின் கருத்துக் கணிப்பில், தமிழத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, சிறந்த தேர்வாக 46 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் (DMK President M K Stalin) முதலிடத்தில் உள்ளார். தற்போது பதவியில் இருக்கும் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) 40 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

இந்த வாக்கெடுப்பு, கருத்துக் கணிப்பின் இறுதி முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. திமுக (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 124 இடங்களை வெல்வதற்கு மிகவும் சாதகமான சூழல் உள்ளது என்றும், ஆளும் அதிமுக (AIADMK) கூட்டணிக்கு 52 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துகணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல மாநிலத்தின் 58 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகவும், இந்த இடங்களில் அதிக அளவில் இழுபறி இருப்பதால், எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளது என கணிக்கமுடியவில்லை  என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ALSO READ | 5 முதல்வர் வேட்பாளர்கள் - 5 முனை போட்டி: யாரு தாங்க வரபோறாங்க.. நீங்களே சொல்லுங்க மக்களே..!

கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி (DMK alliance) சென்னை மண்டலம், தென் தமிழகம் மற்றும் மத்திய பிராந்தியங்களில் பெரும்பான்மை இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் திமுக மற்றும் அதிமுக இடையே ஒரு கடுமையான போட்டி இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளை சேர்ந்த பெரிய புள்ளிகள் வெற்றி பெறுவார்கள், குறிப்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (O Panneerselvam), மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அவர்களின் தொகுதியில் வெற்றி பெறுவார்கள் என்று கணித்துள்ளது. அதேநேரத்தில் அமமுக தலைவர் டி டி வி தினகரன் (T T V Dhinakaran) கோவில்பட்டி தொகுதியிலும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) கோவையில் தெற்கு தொகுதியில் வெற்றி பெற பலமான போட்டி இருக்கும் என்பதையும் கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. 

ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Polls 2021) திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ALSO READ | TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News