போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்...

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்...

Last Updated : Jan 29, 2019, 06:45 PM IST
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்... title=

 

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றிரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்...

பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவு...

மேலும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஜேக்டோ - ஜியோ அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் தலைமை செயலக ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமை செயலக ஊழியர்கள் நாளை, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள அவர், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், ஜேக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட, தலைமை செயலக ஊழியர்கள், 30 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  


போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை....

ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8 நாட்களாக தீவிரமடைந்த போராட்டம் இன்று சற்று தணிந்து பல ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். 

இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாவிட்டால் 17B-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், தற்போது இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளித்துள்ளது.  

தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 90 சதவீதத்துக்கு அதிகமானோர் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், எஞ்சியவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்புமாறு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி, இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி 17பி-யின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஊதியத்தை குறைத்தல், பணி உயர்வை ரத்து செய்தல், பணி உயர்வை நிறுத்தி வைத்தல், பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும் நிலையில், அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், அவர்கள் தரும் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், விதி 17பியின் கீழ் பணிநீக்க நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.  

 

Trending News