சிறைவாசத்தில் இருந்து சென்னைக்கான சசிகலாவின் அரசியல் பாதை நெடுஞ்சாலையா? முட்டுச்சந்தா?

 பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். முதல் சந்திப்பே அதிரடி, சரவெடியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் என பல விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருக்கிறார் சசிகலா.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2021, 08:06 PM IST
  • பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் பயணத்தை தொடங்கினார் சசிகலா
  • ஜெயலலிதாவின் காரில் பயணம் செய்தார் சசிகலா
  • தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் மாநில அமைச்சரின் காரில் ஏறிவிட்டார் சசிகலா
சிறைவாசத்தில் இருந்து சென்னைக்கான சசிகலாவின் அரசியல் பாதை நெடுஞ்சாலையா? முட்டுச்சந்தா? title=

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். முதல் சந்திப்பே அதிரடி, சரவெடியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் என பல விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருக்கிறார் சசிகலா.

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபோதே ஜெயலலிதா கார், அதிமுக கொடி என ஜெயலலிதாவுடன் இருந்தபோது இருந்த அதே அதிகாரத்தை தொடர முற்பட்டார் சசிகலா. ஆனால், தமிழக அமைச்சர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படும்போதே, அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று சிலர் கூற, வன்முறைக்கு சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.

இன்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சசிகலாவின் காரில் அதிமுக கொடி பறந்தது என்றால், தமிழகத்திற்கு வந்தபோது, அதிமுக நிர்வாகியின் காரில் ஏறி பயணத்தை தொடர்ந்தார். தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்ற ஆளும் கட்சியினரின் திட்டம் இதனால் தவிடுபொடியானது.

Also Read |  ஜெயலலிதாவின் மீட்டெடுக்க வந்த அம்மாவா சசிகலா சின்னம்மா? 

இதுமட்டுமா? சசிகலா பயணித்த பாதைகளில் பிரமாண்ட வரவேற்புகளை ஏற்றுக் கொண்டே வந்ததால், சசிகலாவின் வாகனம் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மெதுவாகவே இப்படி பல பரபரப்புகளை ஏற்படுத்திக் கொண்டே வந்த சசிகலா, வாணியம்பாடி டோல்கேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். நான்காண்டு கால சிறைதண்டனைக்கு பிறகு டோல்கேட்டை பிரஸ் மீட்டிங் பாயிண்டாக மாற்றிவிட்டார் சசிகலா.

எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்தெடுத்த அஇஅதிமுகவுக்கு உரிமை கோரி உரிமைக்குரல் எழுப்புவதில் குறியாக இருக்கிறார் சசிகலா என்பதை நிரூபித்துவிட்டது இந்த டோல்கேட் மீட். பல முறை சோதனைகளை சந்தித்திருக்கும் கட்சி, பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது என்று சொன்னார் சசிகலா.

புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே தனது விருப்பம் என கோடிட்டுக் காட்டினார். தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தான் நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்று சொல்லி பரபரப்பைக் கூட்டினார் சசிகலா.

Also Read | சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ததன் பின்னணி  

அஇஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்ன சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு எதற்காக இதை செய்தார்கள்? என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று பதிலளித்தார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்வதற்கான வாய்ப்பாகவும் இந்த டோல்கேட் மீட்டிங்கை பயன்படுத்திக் கொண்டார் சசிகலா.

சசிகலா வரும் வழி நெடுக பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. அதேபோல், சசிகலாவின் வார்த்தைகள் அனைத்தும் தமிழக அரசியலில் பட்டாசாய் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
எம்ஜிஆர், ஜெயல‌லிதா வழியில் அதிமுகவின் பொது எதிரிகள், ஆட்சியில் அமராமல் தடுக்க ஒரே அணியாக ஒற்றுமையாக செயல்படுவோம் என்று சொன்னது ஆளும் கட்சியினருக்கு கலவரத்தை ஏற்படுத்தியதா என்பது எதிர்வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Also Read | Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News