அமெரிக்காவின் (America) முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென், இம்முறை தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தன்னுடன் இணைந்து பணியாற்ற, துணை அதிபராக செனேடர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறியுள்ளார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞரான கமலா தனது வாழ்க்கையில் பல தடைகளைத் தகர்த்து முன்னுக்கு வந்தவர். கமலா ஹாரிசைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகளைப் பார்க்கலாம்:
- ஒரு பெரிய அரசியல் கட்சியால் தேசிய அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின மற்றும் தெற்காசிய அமெரிக்க பெண் ஆவார் கமலா.
- 55 வயதான ஹாரிஸ், 1984 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் ஜெரால்டின் ஃபெராரோ மற்றும் 2008 இல் குடியரசுக் கட்சியின் சாரா பாலின் ஆகியோரைத் தொடர்ந்து இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்றாவது பெண்மணி ஆவார்.
- கலிஃபோர்னியாவில், மாநிலத்தின் உயர் சட்ட அமலாக்க அதிகாரியாக பணியாற்றிய முதல் பெண்மணி மற்றும் முதல் கருப்பின பெண் கமலா. அமெரிக்க செனட்டில் பணியாற்றிய கலிபோர்னியாவிலிருந்து வந்த முதல் கறுப்பின பெண்ணும் அவரே. அதிபர் பதவிக்கான போட்டியில் பங்குகொண்ட இந்திய வம்சாவளியில் தோன்றிய முதல் நபர் கமலா ஹாரிஸ்.
- நவம்பர் மாதம் பிடென் அதிபர் டிரம்பை தோற்கடித்தால், கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராகும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுவார்.
இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு 90 நிமிடங்கள் முன்னர்தான் ஜோ பிடன் (Joe Biden) ஹாரிசை தொலைபேசியில் அழைத்து இதைப் பற்றி தெரிவித்தார் என தெரிகிறது.
இதற்குப் பிறகு கமலா ஹாரிஸ் ட்வீட் செய்து, ஜோ பிடனுடன் சேர்ந்து உழைப்பதை தான் மரியாதைக்குரிய விஷயமாகக் கருதுவதாகவும், பிடன் வெற்றி பெற தன்னால் ஆன அனைத்தையும் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
.@JoeBiden can unify the American people because he's spent his life fighting for us. And as president, he'll build an America that lives up to our ideals.
I'm honored to join him as our party's nominee for Vice President, and do what it takes to make him our Commander-in-Chief.
— Kamala Harris (@KamalaHarris) August 11, 2020
ஜோ பிடனின் இந்த செய்தியைத் தொடர்ந்து கலிஃபோர்னியா சட்டசபை உறுப்பினர்கள் உடனடியாக ட்வீட் செய்து, ஜோ பிடனின் இந்த முடிவைப் பாராட்டினர்.
Principled. Brilliant. Compassionate. Empathetic. Honest. The perfect choice for @JoeBiden. That’s @KamalaHarris.
Let’s go win this.
— Gavin Newsom (@GavinNewsom) August 11, 2020
1964 இல் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்த ஹாரிஸ், 2011 முதல் 2017 வரை மாநிலத்தின் அட்டர்னி ஜெனரலாகவும், சான் பிரான்சிஸ்கோவின் முன்னாள் மாவட்ட வழக்கறிஞராகவும் இருந்தார்.
கமலா ஹாரிசின் தாயார் ஷ்யாமலா கோபாலன் (Shyamala Gopalan) தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்தவர். தன் வாழ்வில் மிக முக்கிய பங்கு தனது தாய்க்கு உண்டு என கமலா பல முறை கூறியுள்ளார்.
ஒரு மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான கமலாவின் தாய் ஷ்யாமளா, கொலோன் புற்றுநோயால் 2009 ஆம் ஆண்டு காலமானார். ‘நீ யார் என்று மற்றவர்களை சொல்ல விடாதே, நீ அவர்களுக்கு சொல்’, ‘உன் கண் முன் இருப்பதை பின் தொடர்ந்து செல், மற்றவை உன் பின் தொடரும்’ என பல அரிய பாடங்களைப் புகட்டி, பல அறிவுறைகளைக் கூறி தன் தாய் தன்னை வளர்த்ததாக கமலா பெருமிதம் கொள்கிறார்.
ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், கமலா அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க துணை அதிபர் ஆவார்!! முதல் தமிழின அமெரிக்க துணை அதிபர் ஆவார்!!