ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு... நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2023, 02:48 PM IST
  • பிப். 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
  • இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் இதில் போட்டியிடுகின்றன.
  • இந்த தேர்தலை பாமக புறக்கணிப்பு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு... நன்றி தெரிவித்த ஸ்டாலின்! title=

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, உடல்நலக்குறைவால் கடந்த ஜன. 4ஆம் தேதி மறைந்தார். அவரின் மறைவைக்கு பின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்.27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இம்முறை தேர்தலை சந்திக்கப்போவதில்லை என்றும் அதிமுக உள்பட யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாஜக தரப்போ அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறது.  

இதில், அதிமுகவின் இரு அணிகளும் இடைதேர்தலை சந்திக்க உள்ளதால், யாருக்கு யார் ஆதரவு என்று பெரும் குழப்பம் நிலவிவருவதாக தெரிகிறது. இரு தரப்பும் வேட்பாளரை தேர்வு செய்ய மும்முரமாக இருந்த வரும் வேளையில், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக திமுக கூட்டணி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தொகுதியை தக்கவைக்க அக்கட்சியினர் பரப்புரையையும் தொடங்கிவிட்டன.  

மேலும் படிக்க | கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

அந்த வகையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தங்களுக்கு ஆதரவளிப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தல் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக அக்கட்சியன் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன. 25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்தார். 

அப்போது அவர்,"காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

MKS

கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,"நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, வெற்றி பெற்ற தொகுதி என்றாலும், காங்கிரஸ் அதனை தக்கவைக்க கடுமையாக பணியாற்றிவரும் நிலையில், கமல்ஹாசனின் ஆதரவு பெரும் ஊக்கத்தை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | திமுகவில் மீண்டும் அழகிரி: டிவிட்டரில் போட்ட பதிவால் திமுகவினரிடையே குழப்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News